Home Tamil Movie Reviews ரஜினி முருகன் – விமர்சனம்

ரஜினி முருகன் – விமர்சனம்

604
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

குறை சொல்லாத அளவுக்கு ரஜினி முருகனை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம்.

மொத்தத்தில் ரஜினி முருகன் - பார்க்கக்கூடிய படம்

3.5
இயக்கம்: பொன்ராம்
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
இசை: டி.இமான்
தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரகனி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றியால், அதே கூட்டணியில் உருவான படம், சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் வெளியாகும் ஐந்தாவது படம் என்ற இந்த காரணங்களே ‘ரஜினி முருகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.rajini-murugan-05

வழக்கம் போல சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி வேலைக்கே போகாமல் ஊருக்குள் கலாட்டா செய்து வருகின்றனர் . ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் யதார்த்தமாக பார்க்க வழக்கம் போல் பார்த்தவுடன் காதல். ஆனால் கீர்த்தி சுரேஷ் அப்பாவிற்கு சிவகார்த்திகேயனை பார்த்தாலே பிடிக்கவில்லை.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் அப்பாவும் கீர்த்தி சுரேஷ் அப்பாவும் இளம் வயதில் நண்பர்களாக இருந்து ஒரு சண்டையால் பிரிந்தவர்கள். பின் கீர்த்தியை காதலிக்க அவர் வீட்டு முன்பே டீக்கடை போடுகிறார் சிவகார்த்திகேயன்.

கீர்த்தி அப்பாவின் பேச்சை கேட்டு சிவகார்த்திகேயனை காதலிக்க மறுக்கிறார். பிறகு டீக்கடையை காலி செய்து ரியல் எஸ்டேட்டில் நல்ல பணம் வரும் என்று தன் தாத்தா ராஜ்கிரணிடம் பணம் வாங்கி ரியல் எஸ்டேட் ஆரம்பிக்க, அதே ஊரில் பணக்காரர்களை டார்க்கெட் செய்து பணம் பிடுங்கும் சமுத்திரகனி சிவகார்த்திகேயனிடம் பணம் கேட்டு மிரட்ட, சிவகார்த்திகேயன் அதை கொடுக்க மறுக்கிறார். இதன் பின் ஒரு சில இடங்களில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட சமுத்திரகனி, சிவகார்த்திகேயன் குடும்பத்தையே அழிக்க முயற்சி செய்கிறார்.

Rajini-Murugan

இதன் பின் ஒரு சில இடங்களில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட சிவகார்த்திகேயன் தன் வீட்டை விற்க முயற்சி செய்ய அந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கு என்று சமுத்திரகனி வந்து நிற்கிறார். அந்த வீட்டை விற்றால் தான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் செட்டில் ஆகமுடியும். அந்த வீட்டை சிவகார்த்திகேயன் விற்றாரா, சமுத்திரகனியின் சதி செயலை முறியடித்தாரா என்று கலகலப்பாக கமர்ஷியலாக கூறியிருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.

கீர்த்தி சுரேஷ் அழகாக நடித்திறுக்கிறார். கதாநாயகிக்குரிய கடமையை செவ்வனே செய்கிறார். சிவகார்த்திகேயனுடன் அவர் வரும் சீன்களில் கலக்கியிருக்கிறார்.

Rajini Murugan

வசனங்களுக்கு இடையில் கேப்பில் கெடா வெட்டும் அளவுக்கு கவுன்ட்டர் கொடுக்கும் சூரிக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. சூரிக்கு இது முக்கியமான படமும் கூட. அதிக ரசிகர்கள் சூரியைக் கொண்டாடுகிறார்கள்.

ஹோட்டல் மேனேஜர் ‘ஹலோ’ சொல்லி கை குலுக்க வரும்போது ‘டைம் இல்லை’ என சொல்வது, ‘சரக்கு அடிச்சிட்டு தகராறு பண்றியா’ என கீர்த்தி கேட்கும்போது ‘சர்பத் குடிச்சிட்டா பேசுவாங்க’ என சொல்வது, ‘உன்னை எங்கேயே பார்த்த மாதிரி இருக்கே?’ என சிவகார்த்திகேயன் கேட்கும்போது போன படத்துல பார்த்திருப்ப? என்ற சூரியின் வசனங்களுக்கு தியேட்டர் தெறிக்கிறது.

59925-rajinimurugan-3

ராஜ்கிரண் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடக்கி வாசித்திருக்கிறாரே என்று பார்த்தால் தன் பங்குக்கு சிவாவுடன் சேர்ந்து இறுதியில் அதகளம் செய்கிறார். சமுத்திரக்கனி ஒரு வீக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும் மதுரை ஏரியாவும் பொங்கல் கொண்டாட்டத்தை போல் படத்தையும் கொண்டாட வைத்துள்ளது. டி.இமானின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒன்ஸ்மோர் ரகம்,

bg2

தில்லா ஜெயிச்சாலும் லக்குன்னு சொல்றாங்க. சிக்ஸர் அடிச்சாலும் டொக்குன்னு சொல்றாங்க என்ற பாடல் வரிகளில் சிவகார்த்திகேயன் எதோ சொல்ல வருகிறாரோ என்று தொன்றுகிறது. குறிப்பாக உன்மேல ஒரு கண்ணு பாடல் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் மெலோடியாக இருக்கும்.

குறை சொல்லாத அளவுக்கு ரஜினி முருகனை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம்.

மொத்தத்தில் ரஜினி முருகன் – பார்க்கக்கூடிய படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here