Home Tamil Cinema News முதன் முதலாக மலேசியாவில் ஷோரூம் திறந்து வைத்த ரஜினி!

முதன் முதலாக மலேசியாவில் ஷோரூம் திறந்து வைத்த ரஜினி!

125

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

அங்கு அப்துல் மாலிக் என்பவரின் ஷோரூம் ஒன்றை ரஜினிகாந்த் தன் கையால் திறந்து வைத்துள்ளார். இதுநாள் வரை ரஜினி எந்த ஒரு கடையையும் திறந்து வைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்துல் மாலிக் தான் கபாலி படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

ரஜினி தற்போது நடித்து வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அவர் ஷங்கரின் எந்திரன் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here