கபாலி 2வது டீசர் வெளியிடாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

கபாலி 2வது டீசர் வெளியிடாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

113

Rajinikanth Fans Disappointed due to Kabali Teaser 2 Postponed

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் முதல் டீசர் 21 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு பெரிய சாதனை படைத்தது. இரண்டாவது டீசர் மற்றும் பாடல்கள் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு முந்தின நாள் இரவே பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. இருப்பினும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா எளிமையாக சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார். இணையதளத்திலும் பாடல்கள் வெளியிடப்பட்டது. மேலும் இதன் டிரைலர் அல்லது டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவும் இன்று காலை 11.06 மணியளவில் கபாலி படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்தார்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் டீசர் வெளியாகவில்லை. பின்னர் சிறிது நேரத்தில், தாணு ‘மன்னிக்கவும், கபாலி டீசர் சில காரணங்களால் இன்று வெளியாகவில்லை. இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்’ என்று கூறினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

https://twitter.com/theVcreations/status/741843308108861441?ref_src=twsrc%5Etfw

NO COMMENTS

LEAVE A REPLY