கபாலி படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளதா?

கபாலி படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளதா?

86

Rajinikanth Kabali Movie Release in Problem

ரஜினியின் கபாலி படத்தின் முன்பதிவு வேகமாக நடந்து வருகின்றது. இருப்பினும் பல இடங்களில் ஹவுஸ் புல் போர்ட் மட்டுமே தெரிகின்றது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் மீது பல வழக்குகள் பதிவு செய்தாலும், அனைத்தையும் மீறி 22ம் தேதி படம் வருவது உறுதி என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுவிட்டது.

இருப்பினும் தற்போது ‘லிங்கா’ படத்தின் நஷ்டத்தை ஈடு செய்யாமல் ‘கபாலி’ படத்தை வெளியிடக் கூடாது என இந்தப் படத்தை வெளியிடத் தடைகோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கோவை நகர விநியோகஸ்தர் சுக்ரா பிலிம்ஸ் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ரஜினி, தாணு உட்பட 7 பேரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லிங்கா படத்துக்கு ஏற்கெனவே ரஜினி மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு சமரசமாகிவிட்டதாக ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், கபாலி வெளியாக 2 நாட்கள் இருக்கும்போது வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த செய்தி கபாலி படத்தின் வெளியீட்டினை எதிர் நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY