Home Tamil Cinema News ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது – ரசிகர்கள் உற்சாகம்

ரஜினிகாந்துக்கு பத்மவிபூஷன் விருது – ரசிகர்கள் உற்சாகம்

164

rajini

 

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் நிரந்தர சூப்பர் ஸ்டாராக உள்ளார். திரையுலகில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ள ரஜினிகாந்த் கடந்த 2000–ம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார். இந்நிலையில் ரஜினிக்கு சில நாட்களாகவே பத்ம விபூசன் விருது அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக பத்ம விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன்பேரில் ஆய்வு நடந்து வந்தது.

இதில் பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வாகியுள்ளார். அவருடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ராமோஜி ராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மற்றும் மறைந்த திருபாய் அம்பானி ஆகியோர் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். பத்ம பூஷண் விருது பெற்ற அடுத்த 5 ஆண்டுகளில் அவருக்கு பத்ம விபூஷண் விருது தேடி வந்திருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.

தற்போதுள்ள தமிழ் நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைப் பெறப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.