Home Tamil Cinema News சுல்தானை ஓரம்கட்டி இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டாரான ‘கபாலி’!

சுல்தானை ஓரம்கட்டி இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டாரான ‘கபாலி’!

85

Rajinikanth's Kabali beats Salman Khan's Sultan

சல்மான் கானின் சுல்தான் படம் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தது. அதனையடுத்து தான் கபாலி வெளியானது. கபாலியின் வசூல் சாதனையை பார்த்தவர்கள் சுல்தானை மறுந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் சல்மான் கானா, ரஜினிகாந்தா என ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்களில் 38 சதவீதம் பேர் சல்மானுக்கு ஆதரவாகவும், 62 சதவீதம் பேர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸை ஆட்சி செய்வது பாலிவுட்டின் எந்த கான்களும் இல்லை மாறாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பதை தெரிந்து பாலிவுட் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ரஜினி சாப் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்று அவர்களும் பெருமைபாடுகிறார்கள்.