Home Tamil Cinema News ரஜினியின் 2.0 படப்பிடிப்பிற்கு வந்த சோதனை

ரஜினியின் 2.0 படப்பிடிப்பிற்கு வந்த சோதனை

141

maxresdefault

ரஜினியின் 2.0 படத்திற்கான படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டுடன் நடந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக 2.0 படத்தின் செட்டில் சேதம் ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் படக்குழு இதுபற்றி கூறுகையில், செட் வெளியில் இருந்த பொருள்கள் தான் சேதம் அடைந்துள்ளது, இதனால் பெரிய பாதிப்புகள் இல்லை. படப்பிடிப்பு 16ம் தேதி தொடங்கப்பட்டு 19ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், 350 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்த இந்தப்படம் தற்போது 400 கோடியை தொடும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அண்மையில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக யாரும் எதிர்ப்பாராத வண்ணம் மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here