ரஜினி வெறும் குண்டு இல்லை, அணுகுண்டு என்று கூறிய ராம்கோபால் வர்மா

ரஜினி வெறும் குண்டு இல்லை, அணுகுண்டு என்று கூறிய ராம்கோபால் வர்மா

58

Ram Gopal Varma says Rajini is not Bomb he is an Atomic Bomb

இந்தியில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அதேசமயம் அடிக்கடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடும் கருத்துக்களால் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினியைக் குறித்த அவரது பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இதே வாய்தான் முன்பு ரஜினியை கடுமையாக சாடியிருந்தது. தற்போது வர்மா அதே வாயால் பாராட்டியும் இருக்கின்றார். இந்த நிலையில் நேற்று கபாலி படத்தின் ப்ரோமோஷன் விமானத்தில் செய்யப்பட்டதை பகிர்ந்து இவர் ‘இது பெரிய உயரம் இல்லை. ஆனால், ரஜினி மிகப்பெரிய உயரத்தை அடைந்துவிட்டார்.

அவர் வெறும் குண்டு இல்லை, அணு குண்டு’ என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு எப்போதும் போல ரஜினி ரசிகர்கள் ‘நீங்கள் உங்க வேலையை மட்டும் பாருங்க’ என்று பதில் அளித்து வருகின்றனர்.

 

NO COMMENTS

LEAVE A REPLY