Home Tamil Cinema News ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது

ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது

115

rani-mukerji

ஹேராம் படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி(36), பல்வேறு இந்திப் படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை ராணி முகர்ஜி இத்தாலியில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராணி முகர்ஜிக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு ஆதிரா எனப் பெயர் சூட்டியுள்ளார்களாம். அதாவது இருவர் பெயர்களிலும் உள்ள முதல் எழுத்துக்களைச் சேர்த்து இந்தப் பெயரை வைத்துள்ளனர்.