Home Tamil Breaking News புழக்கத்திற்கு வருகிறதா புதிய 50 ரூபாய் நோட்டுகள்?…வைரல் போட்டோவால் பரபரப்பு

புழக்கத்திற்கு வருகிறதா புதிய 50 ரூபாய் நோட்டுகள்?…வைரல் போட்டோவால் பரபரப்பு

36

டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போக்கும் விதமாக விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ. ஏற்கெனவே தெரிவிதித்திருந்தது. இந்த நிலையில் கடல் நீல வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள புதிய 50 ரூபாய் நோட்டுகள் போட்டோக்கள் இணைய உலகில் வைரலாகியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி திடீர் அறிவித்தார். அதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வாங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என, ஆர்.பி.ஐ. தகவல் வெளியிட்டு இருந்தது. அதில்,ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றிருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்த நிலையில், கடல் நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் போட்டோக்கள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலடித்து வருகிறது. மேலும், இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படாது என்றும், அவை புழக்கத்தில் உள்ளது போலவே , புதிய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.