யூ டியூப்பில் வெளியான ரெமோ படத்தின் 4 நிமிடம் ஓடும் மியூசிக் வீடியோ

யூ டியூப்பில் வெளியான ரெமோ படத்தின் 4 நிமிடம் ஓடும் மியூசிக் வீடியோ

323

Remo Movie 4 Minute Music Video Released on YouTube

சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெமோ’. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் சதீஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்துக்காக, 4 நிமிடங்கள் ஓடும் ‘மியூசிக் வீடியோ’ படம் யூ டியூப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் பின்னணி பாடகர்-பாடகிகள் இடம் பெற்றுள்ளனர்.

அக்டோபர் 7-ந்தேதி ரெமோ படத்தை திரையிட திட்டமிட்டு இருப்பதாக பட அதிபர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார். அக்டோபர் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை வெளியிட அக்டோபர் 7-ந்தேதியை தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY