Home Tamil Breaking News சென்னை: நாளை ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு பேரணி..

சென்னை: நாளை ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு பேரணி..

23

ஈஷா யோகா மையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு பேரணி நாளை சென்னை வருவதைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது.

அழிந்து வரும் நதிகளை மீட்கவும், நதிகளை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த செப். 3-ல் கோவையில் ‘நதிகளை மீட்போம்’ என்ற தேசிய அளவிலான விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கினார். மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேரணியைத் தொடங்கிவைத்தார். இப்பிரச்சார பேரணி அக்.2-ல் டெல்லியில் முடிவடைகிறது. தமிழகத்தில் கோவை, குமரி, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பலர் கலந்து கொண்டனர். விவசாய சங்கத் தலைவர்கள் பலர் இதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இவ்விழிப்புணர்வு பேரணி நாளை சென்னை வருவதையொட்டி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, நாளை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, சிஐஐ தலைவர் (தமிழ்நாடு) ரவிச்சந்திரன், நடிகை சுஹாசினி மணிரத்னம், இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.