Home Tamil Cinema News தனது நடிப்பு ஆசைப் பற்றி மனம் திறந்தார் – சமந்தா

தனது நடிப்பு ஆசைப் பற்றி மனம் திறந்தார் – சமந்தா

138

samantha

திரையுலகிற்கு வரும் ஒவ்வொரு நடிகைக்கும் கடினமான கடந்த காலம் இருக்கும். ஆரம்பத்தில் நடிக்க சிரிய வாய்ப்பு கூட கிடைக்காமல் பின்பு பிரபலமான முன்னனி நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் பல நடிகைகளது கடந்த காலம் என்பது திரையுலகில் வெளியுலகத்திற்கு தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால் சமந்தாவோ தனது கடந்தகால வாழ்க்கைப் பற்றி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த நேரத்தில் வாய்ப்பு தேடி அலைந்தேன். பல இயக்குநர்கள் எனக்கு நடிப்பு வரவில்லை என்று ஒதுக்கினார்கள். இது எனக்கு மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியது. நடிகை ரேவதி மாதிரி நடிக்க ஆசை அதனால் கண்ணாடி முன்பு நின்று ரேவதி போல நடித்து பழகினேன் என்று தனது மனதில் உள்ளதை மறைக்காமல் கூறியுள்ளார் நடிகை சமந்தா.

நகைக்கடை விளம்பரத்தில் ரேவதியின் மகளாக நடித்ததன் மூலம் தனது பலநாள் கனவு நனவாகிவிட்டது என்று கூரியுள்ளார். சினிமாவில் முன்னனி நடிகயாக இருந்தாலும் விளம்பரப் படங்களிலும் நடித்துவருகிறார் சமந்தா. சமீபத்தில் நடிகை ரேவதியுடன் சமந்தா நடித்த நகைக்கடை விளம்பரம் பிரபலமடைந்துள்ளது.

தற்போதுதான் தெரிகிறது நடிகை ரேவதி மீது சமந்தா வைத்திருக்கும் அன்பினால் தான் அந்த விளம்பரப்படம் பரபலமாகியுள்ளதென்று.