ரித்திகா சிங் நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகும் இறுதிச்சுற்று

ரித்திகா சிங் நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகும் இறுதிச்சுற்று

73

ritika-singh-irudhi-suttru

மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த படம் இறுதிச்சுற்று. இப்படம் தமிழ், இந்தி என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி, ஒரே நேரத்தில் வெளிவந்தது. இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியிருந்தார்.

குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் வெங்கடேஷ் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை அதிகரிக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரித்திகா சிங் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவுள்ளாராம். இப்படத்தை சுதா கே.பிரசாத்தே இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 9-ந் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY