Home Tamil Cinema News தனியொருவர் நடிப்பில் மட்டும் உருவாகும் மற்றொருவன் படம்

தனியொருவர் நடிப்பில் மட்டும் உருவாகும் மற்றொருவன் படம்

121

Matroruvan

புதுமுக இயக்குநர் மஜோ மேத்யூ இயக்கத்தில் ஒரு மாறுபட்ட முயற்சியாக ஒரே ஒரு நடிகர் மட்டுமே நடிக்க, ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘மற்றொருவன்’. ஒரே ஒரு பாத்திரம்தான் திரையில் தெரியும். நடித்திருப்பவர் ரியாஸ்கான்.

இப்படம் பற்றி இயக்குனர் மஜோ மேத்யூ கூறும்போது, உளவியல் சார்ந்த கதை. ஹீரோ ஒவ்வொரு விஷயத்தையும் கனவு காண்கிறான். அது நிஜத்தில் நடக்கிறது. அதிர்ச்சி தரும் ஒரு கனவு காண்கிறான். அது நிஜமாகிறதா என்பது கிளைமாக்ஸ்.

இது ஒரேயொரு நடிகர் மட்டும் நடிக்கும் படம். ரியாஸ்கான் நடித்திருக்கிறார். இவர் நிழலுடன் சண்டைபோடும் காட்சிகள் கஷ்டப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் படம் உருவாகிறது என்று இயக்குன கூறியுள்ளார்.

நிகில் ஒளிப்பதிவில், பென்னி ஜான் இசையமைத்து, வேல்முருகன், கே.எம்.செபாஸ்டின், மோகன் தயாரித்துள்ள இந்தப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது.