Home Tamil Cinema News சந்தானம் இடத்தை பிடிக்கும் RJ பாலாஜி!

சந்தானம் இடத்தை பிடிக்கும் RJ பாலாஜி!

88

RJ-Balaji-earns-Santhanam

நடிகர் சந்தானம் தற்போது முழுநேர ஹீரோ ஆகிவிட்டார். அதனால் அவரை வைத்து கமெடி கதாப்பாத்திரத்தில் படம் இயக்கிவந்த இயக்குனர்கள் வேறு வழி இல்லாமல் வேறு காமெடியன்களை தேடிவருகின்றனர்

அந்த வரிசையில் தற்போது RJ பாலாஜி சந்தானத்தின் இடத்தை பிடித்துவிட்டார். சென்ற வருடம் வெளிவந்த ‘நானும் ரௌடி தான்’ படத்தில் RJ பாலாஜியின் நடிப்பு, படம் பார்த்த அனைவரையும் ஈர்த்தது.

சிவா மனசுல சக்தி தொடங்கி VSOP வரை ராஜேஷின் அனைத்து படங்களிலும் சந்தானம் மட்டுமே காமெடியனாக நடித்திருப்பார்.

இப்போது ஒரே நேரத்தில் ஐந்தாறு படங்களில் நடித்துவரும் ஜீ.வி.பிரகாஷ் அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க Rj பாலாஜியையே ராஜேஸ் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here