சுவாதி கொலை தொடர்பான அண்ணாமலை மீம் குறித்து ஆர்ஜே பாலாஜி கருத்து

சுவாதி கொலை தொடர்பான அண்ணாமலை மீம் குறித்து ஆர்ஜே பாலாஜி கருத்து

111

maxresdefault

இந்தியா முழுவதும் கடந்த இரு வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட விடயம் மென்பொறியாளர் சுவாதியின் படுகொலை தான். இது தொடர்பாக ஆண்களுக்கு ஆர்ஜே பாலாஜி ஓர் அறிவுரை சொல்வதுபோல ஒரு மீம் சமூகவலைத்தளத்தில் பரவியது.

அதில், சுவாதி போல ஆணின் காதலை ஒரு பெண் நிராகரிக்கும்போது, வாழ்க்கையில் முன்னேறிக்காட்ட வேண்டும். அப்போது அந்தப் பெண்ணே வந்து உங்களிடம் பேசுவாள். அவளிடம் மலைடா, அண்ணாமலைடா என்று பதிலளித்து ஃபேஸ்புக்கிலிருந்து பிளாக் செய்துவிடவேண்டும் என ஆர்ஜே பாலாஜி அறிவுரை கூறுவதுபோல இருந்தது அந்த மீம்.

இதற்கு ஆர்ஜே பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: இதை நான் சொல்லவில்லை. ஒரு பெண் உங்களை நிராகரித்தால் அவள் முடிவை மதியுங்கள். அவளை விட்டு விலகிவிடுங்கள். அவளுக்கு எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY