Home Tamil Cinema News மீண்டும் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா

147

s j

எஸ்.ஜே.சூர்யா அடுத்த படைப்பு துவங்கவுள்ளது புதுமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் ‘174‘ படத்தில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் செய்யவிருக்கிறார். ஒரு மரணம் நிகழ்ந்தவுடன் போலீஸார் இது கொலை என்று சந்தேகிக்கும் போது, ‘174’ சட்டத்தை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள்.

இதனை பின்புலமாகக் கொண்டு த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். எஸ்.ஜெ.சூர்யாவின் முந்தைய படத்தி விட இது சுவாரஸ்யமாக இருக்குமென நம்பலாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இறைவி’ படத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஏற்கனவே இசை படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ் என்பது குரிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது எஸ்.ஜெ.சூர்யா மீண்டும் நாயகனாக நடித்து, படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். செல்வராகவனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கவிருக்கும் ‘174’ படத்தில் நடித்து, தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.