கபாலி 2ம் பாகம் எடுப்பது குறித்து தாணு, ரஞ்சித் விரைவில் அறிவிப்பு!

கபாலி 2ம் பாகம் எடுப்பது குறித்து தாணு, ரஞ்சித் விரைவில் அறிவிப்பு!

74

S Thanu says I am Ready for Kabali Sequel

ரஜினி நடிப்பில் உருவான கபாலி படம் உலகம் முழுவதும் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் கபாலி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறாராம். இதனை ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‘கபாலி படத்தின் இறுதிக் காட்சியை நாங்கள் தொடரும் விதத்திலேயே முடித்துள்ளோம். எனவே, விரைவில் அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து நானும், இயக்குநர் ரஞ்சித்தும் ஆர்வமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினி இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டால், இரண்டாம் பாகத்திற்கான வேலைகளைத் துவக்கி விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டாம் பாகத்தில் பணியாற்ற எல்லோரையும் மீண்டும் ஒன்றிணைக்க இருப்பதாகவும் அவர் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதே தகவலை இயக்குநர் ரஞ்சித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “கபாலி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை புரிந்துள்ளது.

எனவே, அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY