மீண்டும் புதிய வாய்ப்புகளைத் தேடும் சமந்தா!

மீண்டும் புதிய வாய்ப்புகளைத் தேடும் சமந்தா!

67

samantha

நடிகை சமந்தா தான் ஒருவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அதனையடுத்து வந்த செய்திகள் அது நாக சைதன்யா தான் என்பதை உறுதி செய்தன.

நாகார்ஜுனாவின் முன்னாள் மனைவியும், நாக சைதன்யாவின் அம்மாவுமான லட்சுமியும் மகனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருந்தார். நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனாவும் மகன்கள் காதலிப்பது மகிழ்ச்சிதான் என்று கூறினார்.

இதன் காரணமாக இந்த வருடமே திருமணத் தேதியை அறிவிக்க இருப்பதாக நாகார்ஜுனா தரப்பில் செய்திகள் வெளியாகியது. இதற்கு வசதியாக சமந்தா வேறு புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் தவிர்க்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் சமந்தா அடுத்த வருடம் வரை தான் தனியாக இருக்கப் போவதாகக் கூறி அதிர்ச்சியளித்திருக்கிறார். நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சமந்தா மருமகளாக வருவதில் விருப்பம் இல்லை என்றும், அதனால் தான் சமந்தா இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனால் நாக சைதன்யா – சமந்தா திருமணம் நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்வி தெலுங்கு திரையுலகில் எழுந்துள்ளது. ஆனால் இதுபற்றி சமந்தாவும், நாக சைதன்யாவும் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY