Home Tamil Cinema News சமந்தா, ஆண்ட்ரியாவை கவர்ந்த எமிஜாக்சன்

சமந்தா, ஆண்ட்ரியாவை கவர்ந்த எமிஜாக்சன்

110

emi jackson

கோடம்பாக்கத்துக்கு வந்து குறுகிய காலத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது படத்தில் நடிக்கும் எமி, ரஜினிக்கும் ஜோடியாகப்போகிறார். ஆக, அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா, சமந்தா என எந்த நடிகைக்கும் கிடைக்காத அரியா வாய்ப்புகள் எமிஜாக்சனுக்கு கிடைத்து வருகிறது என்று தான் கூறவேண்டும்.

மதராசப்பட்டினம், ஐ படங்களில் நடித்து விட்டு தற்போது தங்கமகன், தெறி படங்களில் நடித்து வருகிறார் எமிஜாக்சன். இதையடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், தங்கமகன், தெறி ஆகிய படங்களில் சமந்தாவுடன் இணைந்து நடித்து வருகிறார் எமி. அந்த வகையில், எமியை தனது போட்டி நடிகையாக நினைக்காத சமந்தா, அவர் மாதிரி ஒரு நல்ல தோழியை பார்க்க முடியாது. தங்கமகன் படத்தில் அவருடன் நடித்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அதனால் இப்போது எனது உயிர்த்தோழியாகி விட்டார் எமிஜாக்சன் என்று அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளி வருகிறார் சமந்தா.

அதேபோல், தங்கமகன் படத்தில் எமிஜாக்சனுக்கு டப்பிங் பேசியுள்ளார் ஆண்ட்ரியா. தான் பேசும் டப்பிங், சம்பந்தப்பட்ட நடிகைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்ட்ரியா, எமிக்கு டப்பிங் பேசுவதற்கு முன்பாக சில நாட்கள் அவருடன் நெருங்கி பழகினாராம்.  அப்போது அவரது வாய்ஸ் மட்டுமின்றி அவரது நடவடிக்கைகளை மைண்டில் ஏற்றிய ஆண்ட்ரியா, கிட்டத்தட்ட எமிஜாக்சனின் நிஜ குரல் போன்றே டப்பிங் பேசியிருக்கிறாராம். அப்படி எமியுடன் அவர் நெருங்கி பழகியபோது அவர் மிக இனிமையாக பழகினாராம். விளைவு,

இப்போது ஆண்ட்ரியாவும் எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி எமிஜாக்சன் என்று அவரது புகழ் பாடி வருகிறார். ஆக, மார்க்கெட்டில் இருக்கும் சக நடிகைகள் அனைவரையும் தனது நற்குணத்தினால் கவர்ந்திழுத்து வருகிறார் எமிஜாக்சன். நமக்கு நடிகைகளை மட்டுமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.