Home Tamil Cinema News ஜிம்மில் 100 கிலோ எடையை தூக்கிய 50 கிலோ சமந்தா!

ஜிம்மில் 100 கிலோ எடையை தூக்கிய 50 கிலோ சமந்தா!

180

samantha

நடிகை சமந்தா உடற்பயிற்சிக் கூடத்தில் 100 கிலோ எடையைத் தூக்குவது போன்ற வீடியோ இணையத்தில் சமீபத்தில் வெளியானது. அதுவும் மூன்று முறை 100 கிலோ எடையைத் தூக்குகிறார் சமந்தா. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சமந்தாவின் எடையே 50 கிலோ தான். அவரால் எப்படி 100 கிலோ எடையை தூக்க முடிந்தது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் வியப்பினை பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து சமந்தா கூறுகையில், ‘‘பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்” என தன்னம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார்.

 

மேலும், தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை தக்க வைக்க போராடுகிறேன். எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை” என சமந்தா கூறினார்.

samantha gym

சமந்தாவின் இந்த வீடியோவை இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதோடு, சமந்தாவை ரசிகர்கள் இரும்புப் பெண்மணி எனவும் செல்லமாக அழைக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.