தனுஷின் வட சென்னை படத்திலிருந்து விலகினார் சமந்தா

தனுஷின் வட சென்னை படத்திலிருந்து விலகினார் சமந்தா

60

Samantha stepped out of Dhanush's Vada Chennai Movie

தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார் சமந்தா. இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதனிடையே அவர் நாக சைதன்யாவை கரம் பிடிக்க உள்ளதால் இந்த படத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியானது.

தற்போது அது உண்மையாகி விட்டது. சமந்தா படத்திலிருந்து வெளியேறி உள்ளார். இது குறித்து படத்தரப்பில் கூறும்போது, ‘வட சென்னை படத்தில் சமந்தா நடிக்கவில்லை. இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டபோது தமிழில் மட்டும்தான் எடுப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது 3 மொழியில் படம் உருவாகவுள்ளது. அதற்கு 2 வருட கால்ஷீட் தேவைப்படுகிறது. அவ்வளவு நீண்ட நாட்களுக்கு சமந்தாவால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் வெளியேற முடிவு செய்தார்’ என்று கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY