Home Tamil Cinema News வேதனையில் தவிக்கும் சமந்தா!

வேதனையில் தவிக்கும் சமந்தா!

97

Samantha-Shines

நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர். தெலுங்கு படப்பிடிப்புக்காக விஜயவாடாவில் தங்கி இருக்கிறார். கடந்த 3 நாட்களாக அவர் சென்னையில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதுதாவது

தகவல் தொடர்பு சாதனங்கள் செயலற்று உள்ளதால் கடந்த 3 நாட்களாக எனது பெற்றோரிடம் பேச முடியவில்லை. கடந்த ஒரு வாரமாக நான் தூக்கமில்லாமல் இரவு பொழுதை கழித்து வருகிறேன். எனது உறவினர்கள், நண்பர்கள் பலர் சென்னை வெள்ளத்தில் சிக்கி இருக்கிறார்கள். வெள்ள பாதிப்பில் சிக்கிய சென்னை மக்கள் பலர் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதை எண்ணும்போது குற்ற உணர்வில் தவிக்கிறேன். நான் சென்னைவாசி என்பதில் எப்போதும் பெருமை கொள்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வேன். அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று சமந்தா கூறியுள்ளார்.

சென்னை முலுவதும் வெள்ளத்தில் சிக்கியதையடுத்து ஆர்யா, விஷால், சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அவர்கள் முதல்மாடிக்கு சென்று தங்கினர். அதேசமயம் விஷால், கார்த்தி. சித்தார்த் உள்ளிட்ட பல நடிகர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.