Home Tamil Cinema News மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமுத்திரக்கனி

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமுத்திரக்கனி

266

samuthirakani

சமுத்திரக்கனி நடிகராகவும், இயக்குனராகவும் பல வெற்றிப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். அதில் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் ஆகிய படங்கள் தொடர் வெற்றி படங்களாக அமைந்தது.

இந்நிலையில் சமுத்திரக்கனி சமீபத்தில் பெண்கள் தின ஸ்பெஷலாக ஒரு வார பத்திரிக்கை நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அங்கு தன் தாய் பற்றி அவர் பேசுகையில்,

எனது தாய் இன்றும் ஊரில் விறகு சுமக்கிறார், நான் தான் உனக்கு பணம் அனுப்புகிறேனே அம்மா, பிறகு ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு, அதெல்லாம் உன் செலவுக்கு சேர்த்து வைத்துள்ளேன் என்று அவர் கூறினார்’ என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்கலங்கிவிட்டார். இதனால் னிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் கண்கலங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here