Home Tamil Cinema News நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்

நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்

106

sanjay-dutt

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த 1993 ம் ஆண்டில் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஏ கே 56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது சஞ்சய் தத் மகராஷ்டிராவில் உள்ள புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். கோர்ட் விதித்த தண்டனைக் காலம்படி அவர் நவம்பர் மாதம் வரை சிறையில் இருக்க வேண்டும். ஆனால் சஞ்சய் தத்தின் நன்னடத்தை காரணமாக அடுத்த வருடம் மார்ச் 7 ம் தேதி விடுதலை செய்யப்படவிருக்கிறார்.

சஞ்சய் தத் மட்டுமல்ல பொதுவாகவே ஜெயில் கைதிகளுக்கு நன்னடத்தை காரணமாக சிறை தண்டனை குறைக்கப்படுவது உண்டு என்று எரவாடா சிறை அதிகாரி பவார் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத் விடுதலை குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்து மீடியாக்களிலும், சமூக வலை தளங்களிலும் அவரது பேச்சு அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.