Home Tamil Cinema News சந்தானம் பிறந்தநாள் ஸ்பெஷல் 2016

சந்தானம் பிறந்தநாள் ஸ்பெஷல் 2016

153

maxresdefault

நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறியுள்ள சந்தானம் இன்று அவருடைய 37வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தற்போது ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் அடுத்து ‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்திலும் கதாநாயகனாகவே நடிக்க உள்ளார். நாயகர்களுக்கு நண்பனாக, நகைச்சுவை நடிகராக நடிப்பதைத் தவிர்த்து விட்ட சந்தானம் இனி ஹீரோவாக மட்டுமே நடிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் மட்டுமே மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய குழுவினர் ‘சான்டா ஆன்த்தம்’ என்ற வீடியோ பாடலை யு டியூபில் வெளியிட்டுள்ளனர். சந்தானம் புகழ் பாடும் விதத்தில் உள்ள அந்தப் பாடலில் விஷால், உதயநிதி ஸ்டாலின், விதார்த், கருணாகரன், தம்பி ராமையா, மயில்சாமி, சஞ்சீவ், பிரேம்ஜி உள்ளிட்டோர் அந்தப் பாடலின் சில வார்த்தைகளுக்கு வாயசைத்து நடித்துக் கொடுத்தும், சந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லியுள்ளார்கள்.

இதனிடையே சந்தானம் தனது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலைக்கு சென்று வருவது வழக்கம். அதேப்போன்று இந்தாண்டும் தனது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை சென்றுள்ளார். மாலையில் தனது ரசிகர்களை அவர் சந்திப்பார் என தெரிகிறது. நாமும் சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தானம்…..

‘சான்டா ஆன்த்தம்’ வீடியோ பாடல் –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here