Home Tamil Cinema News கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம்

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம்

67

Santhanam Next New Movie as Hero Directed by Gautham Menon

கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’, தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என 2 படங்களை தொடர்ந்து தற்போது 4 ஹீரோக்கள் நடிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் தொடங்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் பிருத்விராஜ், புனித் ராஜ்குமார், சாய் தரண் தேஜ் என மற்ற மொழி ஹீரோக்களைத் தேர்வு செய்த கவுதம் மேனனுக்கு தமிழில் ஹீரோ கிடைப்பது கடினமாக இருந்தது. சமீபத்தில் ஜெயம் ரவி இப்படத்தில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் கவுதம் மேனன் கேட்கும் தேதிகளில் ஜெயம் ரவியிடம் கால்ஷீட் இல்லை என்பதால் சந்தானத்தை இப்படத்தின் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

நண்பர்கள் சேர்ந்து சுற்றுலா போவது போன்ற கதையென்பதால் சந்தானம் இப்படத்தின் கதைக்கு பொருந்துவார் என்பது கவுதம் மேனனின் எண்ணமாக உள்ளது. அனுஷ்கா, தமன்னா தவிர்த்து 3 வது ஹீரோயினுக்கான தேடலில் கவுதம் மேனன் தற்போது பிசியாக இருக்கிறார். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தில்லுக்குத் துட்டு படத்தைத் தொடர்ந்து சந்தானத்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.