Home Tamil Cinema News ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் இல்லை

ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் இல்லை

129

Santhanam-Rajesh

சிவா மனசுல சக்தி படத்தில் இருந்து வாசுவும் சரவணும் ஒண்ணா படிச்சவங்க படம் வரை தொடர்ச்சியாக சந்தானத்துக்கு பிரதான பாத்திரம் அளித்து வந்தவர் இயக்குநர் ராஜேஷ். சந்தானத்தின் ஒருவரி வசனங்கள் எல்லாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவையாக அமைந்திருக்கிறது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக வைத்து புதிய படமொன்றை அடுத்தாண்டு முதல் துவங்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சந்தானம் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பால சரவணன் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவிருக்கிறார். தற்போது நாயகி மற்றும் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிப்பவர்களுக்கான தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும்மென தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.