Home Tamil Cinema News கவுண்டமணியை அந்த கால அஜித்குமார் என்று கலாய்த்த சந்தானம்!

கவுண்டமணியை அந்த கால அஜித்குமார் என்று கலாய்த்த சந்தானம்!

144

santhanam goundamani

தமிழ் சினிமாவில் யாராலும் நிரப்ப முடியாத இடத்தை பிடித்தவர் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி. சிறிய நடிகர்கள் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளும் இவர் சில வருடங்கள் ஓய்வுக்கு பிறகு 49ஓ படத்தில் நடித்தார்.

அதனையடுத்து இவர் தற்போது நடித்துள்ள எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சந்தானம், மேடையில் உட்கார்ந்திருந்த சில நிமிடங்களில் பலரையும் கலாய்த்து தள்ளிவிட்டார். அவர் கூறும் போது எப்போதும் காமெடி டிப்போ என்றால் அது கவுண்டமணி அண்ணன் தான், அவரிடத்தை யாராலும் நிரப்ப முடியது என்று கூறினார்.

மேலும், கவுண்டமணி அந்த கால அஜித் குமார், இவரை மேடையில் பார்ப்பது அரிது. அவருடைய பட விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி என்று கூறினார்.