செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம்

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம்

120

Santhanam Teams Up With Selvaraghavan For His Next Movie

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு திரைப்படம், வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக இவர் சர்வர் சுந்தரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இந்தத் தகவலை இருவருமே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்கள். செல்வராகவன், சந்தானம் கூட்டணி தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெளதம் மேனன் தயாரிப்பில், இயக்குநர் செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். நந்திதா, ரெஜினா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY