Home Tamil Cinema News கேடி பில்லா கில்லாடி ரங்காவின் இரண்டாம் பாகம் ரெடி!

கேடி பில்லா கில்லாடி ரங்காவின் இரண்டாம் பாகம் ரெடி!

143

kedi-billa-killadi-ranga 2

சிவகார்த்திகேயன் விமல் இருவரும் செர்ந்து நடித்த படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படத்தில் நடித்ததன் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்ற்ம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாண்டிராஜ் ஆயத்தமாகிவிட்டார். மீண்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் கலக்குவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவது சிவகார்த்திகேயன் இல்லையாம், ஜி.வி.பிரகாஷ் தான் ஹீரோவாம். மேலும் இதில் சத்யராஜ், ராஜ்கிரன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம். இருப்பினும் புதியதை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப்படம் விருந்தாக அமையுமென நம்பலாம்.