Home Tamil Cinema News சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பில் உள்ள மர்மம்!

சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பில் உள்ள மர்மம்!

568

Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படம் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் எங்கிற அளவுக்கு வந்துவிட்டார். இவர் தற்போது ரெமோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். இதற்காக பிரபல ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் இப்படத்தில் பணியாற்றி வருகிறார். பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தின் தலைப்பு ‘ரெமோ’ என்று அறிவித்ததுமே, இதில் ஏதாவது மர்மம் இருக்குமா என பல்வேறு தரப்பிலும் இருந்து சந்தேகங்கள் எழுந்தது.

தற்போது, அந்த மர்மம் விலகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆண் மற்றும் பெண் கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ஆண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் பெயர் ‘ரெ’ என்று தொடங்குமாம். பெண் கெட்டப்பில் வரும் சிவகார்த்திகேயனின் பெயர் ‘மோ’ என்று தொடங்குமாம். இதனால்தான் படத்திற்கு ரெமோ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.