Home Tamil Cinema News வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை மீட்ட பாதுகாப்பு படையினர்

140

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர் ராஜ்கிரணை பாதுகாப்பு படையினர் படகு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கிய மூத்த நடிகை லட்சுமியும் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.

மக்கள் மட்டும் இல்லாமல் நடிகர் நடிகைகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது வீட்டின் கீழ்ப்பகுது வெள்ளத்தில் மூழ்கியதால் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொண்டு அமைப்பினரை சேர்ந்தவர்களும், பாதுகாப்பு படையினரும் பலரை காப்பாற்ரியுள்ளனர்.

இருப்பினும் இன்னும் பலர் சிறு உதவிகள் கூட கிடைக்காமல் மழை பாதிப்பினால் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர், தமிழக அரசு முழுவீச்சில் மீட்பு பணிகளை தொடங்கினாள் மட்டுமெ பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற் முடியும் என்கிற நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செல்போன் டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், ஜென்ட்ரைட்டர், மின்சார வசதி இல்லாததால் அங்கு செல்போன் பேசும் வசதி தடைபட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட உதவிக்காக யாரையும் கூப்பிட முடியாத நிலையில் சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாமல் உறவினர்கள் அல்லாடுகிறார்கள்.

இதற்கிடையே சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் பல தொழில் அதிபர்களயும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷத்தின் வீட்டில் 11 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்ததால் அவர் அகதி போன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.