Home Tamil Cinema News மக்கள் படும் கஷ்டங்களை கண்டு கவலைப்பட்ட நடிகர் கமல்ஹாசன்

மக்கள் படும் கஷ்டங்களை கண்டு கவலைப்பட்ட நடிகர் கமல்ஹாசன்

86

Kamal-Hassan

சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டியில்

வெள்ளசேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.சென்னையில் ஒட்டுமொத்த, நிர்வாகமும் உருகுலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் தேவைப்படும். மக்கள் செலுத்திய வரிப் பணம் அனைத்துக்கும் எங்கே சென்றது?

நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை. என்னுடைய வரியை ஒழுங்காக செலுத்தி வருகிறேன். கடுமையாக நான் உழைத்து சம்பாதித்த அந்த பணத்தை வைத்து எனக்கும் என் மக்களுக்கும் நிர்வாகம் என்ன செய்து இருக்கிறது? எனக்கு கடவுள் கிடையாது. கடவுளாக பாவித்துக்கொள்பவர்களின் முடிவுகளையும் ஏற்க மாட்டேன்.

ஆளும் அரசாங்கமானது, அது எந்த கட்சியாக இருந்தாலும் கார்ப்பரேட் திட்டத்துக்கு ரூ.4,000 கோடி வரை செலவிட முடிகிறது. நாட்டில் நாம் 120 கோடி மக்கள் இருக்கிறோம். இந்த மக்களுக்கு ரூ.4,000 கோடியை ஏன் பிரித்துக் கொடுக்க கூடாது? அப்படி கொடுத்து இருந்தால் இந்தியர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள்.

நான் முற்றிலுமாக கவலையில் ஆழ்ந்துள்ளேன். நான் வசதியான ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசுடன் ஒப்பிட்டால் எனது வருமானம் மிகவும் சொற்பம். ஆனால், அரசோ, வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம்தான் பணம் கேட்கிறது. பிறகு அரசு என்னதான் செய்யும்? இருப்பினும், நான் பணம் கொடுக்கவே செய்வேன். நான் பணக்காரன் என்று நினைத்துக்கொண்டு பணம் கொடுக்கப்போவதில்லை. நான் எனது மக்களை நேசிக்கிறேன். பணக்காரன், ஏழை என நன்கொடைக்காக இப்போது பேசப்படும் அனைத்துமே நாடகம்தான்.

அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும்வரை சமூக ஏற்றத்தாழ்வை நீக்குவோம் என்றுதான் பேசிக்கொண்டிருக்க போகிறார்கள். இவ்வாறு கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.