பிரபாகரனை தலைவனாக்கியது தமிழனல்ல சிங்களவன் என்று சீமான் பரபரப்பு பேச்சு

பிரபாகரனை தலைவனாக்கியது தமிழனல்ல சிங்களவன் என்று சீமான் பரபரப்பு பேச்சு

121

Seman

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேற்று ஈழம் தனி நாடாக உருவாக வேண்டும் என்ற கருத்தியலில் உருவான கூட்டாளி படத்தின் திரையிடலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசுகையில்,

தமிழனுக்கு என தனி நாடு உருவாக வேண்டும். தலைவன் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. தமிழ் தேசியத்தலைவர் பிரபாகரனை தலைவனாக்கியது தமிழனல்ல, சிங்களவன் தான். அவரது தலைக்கு ரூ.10 லட்சம் அறிவித்த போது தான், இவர் யார் என்று அனைவராலும் அறியப்பட்டார் என்றார்.

மேலும் ஈழத்தில் நடந்த கொடுமைகளை பற்றியும் தனது வழக்கமான உணர்ச்சிகரமான பேச்சில் சீமான் வெளிப்படுத்தினார். இந்த விழாவில் மறைந்த இயக்குனர் மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் பாடகர் தேனிசை செல்லப்பா, பேரறிவாளன் தாயார், பேரரசு, வ.கௌதமன் இயக்குனர்கள் ரவிமரியா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY