Home Tamil Cinema News சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் சிவன் ஸ்ரீநிவாஸ்

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரானார் சிவன் ஸ்ரீநிவாஸ்

565

sivan-srinivas

பரபரப்பாக நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தலில் சீரியல் நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக கிறிஸ்துமஸ் தினமான இன்று மாற்றப்பட்டது. 1427 உறுப்பினர்களைக் கொண்ட இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் என மொத்தம் 23 பதவிகளுக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது.இன்று இரவே தேர்தல் முடிவு விபரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சிவன் சீனிவாசன் தலைமையில் வசந்தம், பானுபிரகாஷ் தலைமையில் புதிய அலைகள், ரவிவர்மா தலைமையில் உழைக்கும் கரங்கள் என்று மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

வசந்தம் அணியின் சிவன் சீனிவாசன் 280 ஓட்டுகளுக்கு மேல் எடுத்து தலைவரானார். ரவி வர்மா 205 ஓட்டுக்களும், பானு பிரகாஷ் 180 ஓட்டுக்களும் எடுத்தனர். சமீபத்தில் தான் பரபரபரப்பாக நடந்து முடிந்தது நடிகர் சங்கத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.