Home Tamil Movie Reviews சேதுபதி விமர்சனம்

சேதுபதி விமர்சனம்

976
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் விஜய் சேதுபதியை மகா சாதுவான ஹீரோவாக கட்டிய இயக்குனர் அருண் குமார், தனது அடுத்த படத்திலேயே ஆக்ஷனுக்குத் தாவி விஜய் சேதுபதியை போலீஸ் அதிகாரியாக காட்டி மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் சேதுபதி - ரசிகர்களுக்கு விருந்து

3
இயக்கம்: அருண் குமார்
ஒளிப்பதிவு: பி தினேஷ் கிருஷ்ணன்
இசை: நிவாஸ் பிரசன்னா
தயாரிப்பு: ஷான் சுதர்சன்
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், வேல ராமமூர்த்தி

மதுரையில் ஒரு போலீஸ் நிலையத்தில் சேதுபதி எனும் துடிப்புமிக்க நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி. மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் கன்ட்ரோலில் இருக்கும் ஏரியாவில் பக்கத்து ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

Sethupathi-Movie-Stills-2-1024x683

விஜய் சேதுபதி அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் அந்த ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வரும் வேலா ராமமூர்த்தி என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது. மேலும் வேறொரு எஸ்.ஐ.யை கொலை செய்வதற்கு பதிலாக, தவறுதலாக இந்த எஸ்.ஐ.யை கொலை செய்திருக்கிறார்கள் என்பதையும் கண்டறிகிறார்.

ஊரே வேலா ராமமூர்த்தியை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கிறார் வேலா ராமமூர்த்தி.

இந்த சூழ்நிலையில், செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர். அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதனால் விஜய் சேதுபதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

IMG_2014

முடிவில் தன்னை சிக்க வைத்த சதி திட்டத்திற்கு யார் காரணம் என்பதை விஜய் சேதுபதி கண்டு பிடித்தாரா, இல்லையா, வேலா ராமமூர்த்தியின் பழிவாங்கும் திட்டம் என்ன ஆனது, என்பதே படத்தின் மீதிக்கதை.

விஜய் சேதுபதி மிடுக்கான, அதே நேரம், சற்றே கிறுக்கான துணிச்சல் போலீஸ் அதிகாரியாக உயர் அதிகாரியிடம் சத்தம் போட்டு பேசுதல், தவறானவர் என்று தெரிந்ததும், அசால்ட்டாக சக இன்ஸை’யே அடிப்பது, வாத்தியார் உதவியாளரின் போனை கட் செய்வது, அவர்களை காத்திருக்க வைத்து, அவர்கள் கண் எதிரிலேயே வாத்தியாரை அடித்து இழுத்து வருவது.

அதைப் பார்த்து அவர்கள் முறைப்பது கண்டு, அவனுங்க முறைக்கிறாங்கன்னு நினைக்கிறேன் – சிரிப்பு சிரிப்பா வருது. அவனுங்களை போகொல்லுமூர்த்தி. என கிண்ட லாய் சீண்டுவது போன்ற காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

Sethupathi Movie Stills

காதல் மனைவி ரம்யா நம்பீசனின் பெற்றோர் கல்யாண நாளை, இவர் ஞாபகம் வைத்திருந்து மனைவியை வாழ்த்து சொல்ல சொல்வது.

நான் பேசினா கண்ணைப் பார்த்து பேசுடி என பொண்டாட்டியப் பார்த்து பிள்ளைகளுக்கு தெரியாமல் கண் அடிப்பது, ஐந்து எண்ணுவதற்குள் உண்மை சொல் என ஸ்கூல் பசங்களை துப்பாக்கி வைத்து மிரட்டுவது. என சகலத்திலும், மீசை, கிருதா, நடை, உடை, பாவனை உள்ளிட்ட சகலத்திலும் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார் சேதுபதி.

Sethupathi-Movie-Photos-2ரம்யா நம்பீசன், இட்லி பொடி எண்ணெய்விரல்லை புருஷன் நக்க கொடுப்பது. இங்கப் பாரு அந்தாளு என்னை அடிச்சான்னா திருப்பி வந்து என்னை கொஞ்சுவான். அதுக்கு நான் இங்க இருக்கணும். என தன் அம்மாவை அதட்டுவது, சமாதானத்திற்கு வரும் புருஷணை காலில் விழ வைப்பது.

வீட்டை சுற்றிய வில்லன் ஆட்களை கண்டு புருஷனுக்கு போன் போட்டு பதறுவது. பிள்ளைகளுக்கு தெரியாமல் புருஷனுடன் அடிக்கடி ஊடல், கூடல் கொள்வது. என ரொமான்ஸிலும் லூட்டியிலும் சேதுபதியையே தூக்கி சாப்பிடுகிறார் ரம்யா.

யோவ், சேதுபதி மண்டே வரும் போது ஷேவ் செய்துட்டு யூனிபார்ம் போட்டுட்டு வா. உன் வேலை கன்பார்ம். எனும் மிரட்டல் விசாரணை அதிகாரியின் தோரணை, விஜய்யின் மிடுக்கு மேல் அதிகாரி மூர்த்தி, வில்லன் வேல ராமமூர்த்தியின் அசால்ட் அக்யூஸ்ட் தனங்கள், விஜய், ரம்யா ஜோடியின் பிஞ்சுகளாக வரும் மாஸ்டர்ராகவன், பேபி தனுஷ்ரா உள்ளிட்ட எல்லோரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

Sethupathi020120165

நிவாஸ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் நன்றாக அமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் பல காட்சிகள் மிகவும் தத்ரூபமாக உள்ளன.

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் விஜய் சேதுபதியை மகா சாதுவான ஹீரோவாக கட்டிய இயக்குனர் அருண் குமார், தனது அடுத்த படத்திலேயே ஆக்ஷனுக்குத் தாவி விஜய் சேதுபதியை போலீஸ் அதிகாரியாக காட்டி மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் சேதுபதி – ரசிகர்களுக்கு விருந்து