Home Tamil Cinema News ஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வரும் ஷங்கர்

ஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வரும் ஷங்கர்

100

50221545

ரஜினி நடிப்பில் உருவாகும் 2.0 படத்திற்காக ஷங்கர் தற்போது பிஸியாகவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் மேலும் பல முண்ணனி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது இப்படத்தின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டைக்காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் கலைஞர்களான கென்னி பேட்ஸ், ஆரோன் க்ரிபந் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் ‘டை கார்ட்’ மற்றும் ‘ட்ரான்ஸ்பார்மர்ஸ்’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் வடிவமைத்தவர்கள் ஆவர். இதனால் ரசிகர்களிடம் 2.0 படத்தின் மீதான எதிர்பர்ப்பு அதிகமாகிக்கொண்டேபோகிறது.