ராஜா ரங்குஸ்கி பட முத்தக்காட்சியில் 19 டேக்குகள் வாங்கிய இளம் நடிகர்!

ராஜா ரங்குஸ்கி பட முத்தக்காட்சியில் 19 டேக்குகள் வாங்கிய இளம் நடிகர்!

21

இளம்  சிரிஷ் கதாநாயகனாகவும், வில் அம்பு புகழ் சாந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்து வரும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தை தரணிதரன் இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 6ம் தேதி துவங்க உள்ளது. இந்த நிலையில் படம் குறித்து தரணிதரன் கூறுகையில், படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹீரோ சிரிஷ் சிறப்பாக நடிக்கிறார்.

இருப்பினும் முத்தக் காட்சி என்று வந்துவிட்டால் தான் பதட்டமாகிவிடுகிறார். நாயகியை முத்தமிட 19 டேக்குகள் வாங்கினார். வேண்டும் என்றே செய்தாரா தெரியவில்லை என்று கூறி சிரித்தார் இயக்குனர் தரணிதரன்.

 

NO COMMENTS

LEAVE A REPLY