Home Tamil Cinema News அமீர் கானுக்கு வந்த சோதனை!

அமீர் கானுக்கு வந்த சோதனை!

116

aamir

பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவோம் என்று சர்ச்சைகளுக்கு பேர் போன இந்து அமைப்பான சிவசேனா அறிவித்துள்ளது.

நானும் என் மனைவி கிரணும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். நாட்டில் எங்களை சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்து பார்க்கவே அவர் அச்சம்கொள்கிறர். நாட்டில் சகிப்புத்தன்மையற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது என்று அண்மையில் அமீர் கான் ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்தார்.

இதனால் கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் அமீர்கான் பாகிஸ்தானுக்கோ அல்லது அரபு நாடுகளுக்கோ போகட்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலித்தன. விரைவில், திரைக்கு வரவிருக்கும் டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர் கான். லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஓட்டலில் தங்கியுள்ள நிலையில், அமீர் கானுக்கு எதிராக,

நேற்று அந்த ஓட்டலை முற்றுகையிட்ட சிவசேனா அமைப்பினர் அமீர் கானை கொச்சையான வார்த்தைகளில் திட்டி, அவரது புகைப்படத்தைக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன், அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

இதுகுரித்து அமீர் கான் வெளியிட்டுள்ள செய்தியில் எனக்கு எதிராக செயல் படுபவர்கள் நான் கூறிய கருத்தையே உண்மை ஆக்குகின்றனர்  என்று தெரிவித்துள்ளார்.