Home Tamil Cinema News வயது அதிகமானால் கவலையில்லை என்று கூறும் ஸ்ரேயா

வயது அதிகமானால் கவலையில்லை என்று கூறும் ஸ்ரேயா

125

திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து ஓய்ந்தபிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க சில நடிகைகள் முன்வருகின்றனர். வயதான வேடங்களில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர், சினிமாவோடு வேறு எந்த தொழிலையும் ஒப்பிட முடியாது. 17 வயது முதல் நான் நடித்து வருகிறேன். இப்போது 34 வயதாகிறது.

எந்த வயதாக இருந்தாலும் ஏன் 65 வயதானாலும் சினிமாவில் மட்டும்தான் நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அமிதாப்பச்சனுக்கு இந்த வயதிலும் அருமையான வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதே வேறு தொழிலாக இருந்தால் ஏதாவது செய்ய அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே.

நடிகையாக இருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார். ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. பிறந்த தேதி, பிறந்த மாதத்தை சொன்னாலும் பிறந்த வருடத்தை சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணமும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here