Home Tamil Cinema News பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஸ்ரேயா

பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஸ்ரேயா

215

shriya-saran

ராஜமௌலி இயகத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளிவந்த படம் பாகுபலி. இப்படத்தை எடுக்கத் தொடங்கும்போதே இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டார் ராஜமௌலி.

அதன் பிறகு முதல் பாகம் வெளியாகி பெரிய வசூலையும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றதனால் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகுவதால், முந்தைய பாகத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த பாகத்திலும் நடித்து வருகிறார்கள். தற்போது கூடுதலாக, இரண்டாம் பாகத்தில் ஸ்ரேயாவும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்தில் ராணாவுக்கு ஒரு மகன் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஆனால், யார் ராணாவின் மனைவி என்பதை காட்டியிருக்க மாட்டார்கள். அதனால், இரண்டாம் பாகத்தில் ராணாவின் மனைவியாக நடிப்பதற்கு ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரேயா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here