Home Tamil Cinema News பேஸ்புக்கால் ஸ்ருதிஹாசனுக்கு வந்த வினை!

பேஸ்புக்கால் ஸ்ருதிஹாசனுக்கு வந்த வினை!

160

Shruti-Hassan-hot

நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். தனது படங்கள், பயணங்கள் மற்றும் அனுபவங்களை தினமும் பகிர்ந்துகொள்கிறார். சில சமயம் அதுவே அவருக்கு வினையாகவும் ஆகிவிடுகிறது.

அந்த வகையில் ஃபேஸ்புக் மூலம் அவர் இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார். இது பரபரப்பானது. கடந்த சில நாட்களாக அவரது ஃபேஸ்புக்கை யாராவது முடக்கி இருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஸ்ருதிஹாசன் தனது கருத்துக்களை பகிர்வதற்காகவும் பயன்படுத்தும் ஃபேஸ்புக் பக்கத்தில் திடீரென்று தில்வாலே படத்தில் நடித்த கிருத்தி சனோன் நடிகையின் 13 இன்ஸ்டாகிராம் போட்டோ வெளியிடப்பட்டிருக்கிறது.

தேவையில்லாமல் ஸ்ருதியின் ஃபேஸ்புக்கில் கிருத்தியின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பது ஸ்ருதி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. யாராவது அவரது ஃபேஸ்புக்கை முடக்கி கிருத்தி சனோன் படத்தை வெளியிட்டிருப்பார்களோ என்று கிசுகிசுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here