Home Tamil Cinema News தமிழில் உருவாகும் ஸ்ருதி ஹாசன் நடித்த பலுப்பு

தமிழில் உருவாகும் ஸ்ருதி ஹாசன் நடித்த பலுப்பு

141

shruti

தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டில் வெளிவந்த பலுப்பு என்ற தெலுங்கு படத்தில் ரவி தேஜாவுடன் ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, பிரம்மானந்தம் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படம் தற்போது தமிழில் தயாராகி வருகிறது. ஆக்க்ஷன், காதல், காமெடி என எல்லா அம்சங்களும் நிறைந்த இந்த படம் எல்லாரும் பார்க்கக் கூடிய தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. கொழுப்பு அல்லது திமிருடா என்ற பெயரில் வெளிவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜராஜன் ஏ.ஆர்.கே அவர்கள் இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் பாடல் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.