Home Tamil Cinema News மேக்அப் இல்லாமல் எப்படி இருக்கிறேன் என ரசிகர்களிடம் கேட்ட ஸ்ருதி ஹாசன்

மேக்அப் இல்லாமல் எப்படி இருக்கிறேன் என ரசிகர்களிடம் கேட்ட ஸ்ருதி ஹாசன்

166

shruti-haasan

ஸ்ருதி ஹாசன் மேக்அப் போடாமல் நடித்த சில காட்சியை போட்டோவாக நெட்டில் வெளியிட்டார். நான் எப்படி இருக்கிறேன் என ரசிகர்களிடம் அவர் கேட்டிருக்கிறார்.

மலையாளத்தில் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தை தெலுங்கில் ‘மஞ்சு’ பெயரில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் டீச்சராக மேக் அப் போடாமல் நடிக்க கேட்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு சொல்வதாக கூறிய ஸ்ருதி பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படத்துக்காக சாதாரண காட்டன் சேலை அணிந்து நகை எதுவும் அணியாமல் எளிமையான தோற்றத்தில் நடிக்கிறார். அதற்காக மேக் அப் டெஸ்ட் அணிந்து ரிகர்சல் பார்த்தார். அதனை போட்டோவாகவும் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இளம் ஹீரோயின்களில் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் தாராளமாக நடிப்பவர் ஸ்ருதி ஹாசன். அவரது ஒரு கவர்ச்சி குத்து பாடலுக்கே ரூ. 1 கோடி வரை சம்பளம் தர சில தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.