Home Tamil Cinema News தோழா வெற்றியால் மனவருத்தத்தில் இருக்கும் ஸ்ருதி!

தோழா வெற்றியால் மனவருத்தத்தில் இருக்கும் ஸ்ருதி!

180

Shruti-Hassan-Became-A-Mommy

நாகார்ஜூன், கார்த்தி நடித்த தோழா படம் கடந்தவாரம் ரிலீசானது. இந்தப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். இதில் கார்த்தியின் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமானவர் ஸ்ருதி தான். சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி. சம்பளப் பிரச்சினை தான் ஸ்ருதியின் இந்த முடிவுக்குக் காரணம் என்றும், தமிழில் கிடைத்த அஜித் பட வாய்ப்பு தான் காரணம் என்றும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் தனது கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என ஸ்ருதி கருதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது தோழாவில் தமன்னாவின் கதாபாத்திரமும், அவரது ஆடைகளும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

படம் முழுவதும் வரும் வகையில் அவரது கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. அஜித்தின் ஜோடியாக வேதாளம் படத்தில் நடித்த போதும், அப்படத்தில் ஸ்ருதியை விட அதிகம் பாராட்டுகளை அள்ளியவர் லட்சுமிமேனன் தான். இதெல்லாம் தான் ஸ்ருதியின் மனவருத்தத்திற்கு காரணம் என்கிறார்கள் திரையுலகினர்.