Home Tamil Cinema News நாகூர் பிரியாணி சர்ச்சை டுவிட்டுக்கு சித்தார்த் விளக்கம்

நாகூர் பிரியாணி சர்ச்சை டுவிட்டுக்கு சித்தார்த் விளக்கம்

208

siddharthநடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தனது படம், இயல்பு வாழ்க்கை குறித்து தனது ரசிகர்களுக்கு அவ்வப்போது ட்வீட் செய்துகொண்டிருப்பார். அவர் அப்படி செய்த ஒரு டுவிட் ஒன்று சமீபத்தில் பெரிய பிரச்சனையை சந்தித்தது.

அதில் “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெருநாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது” என குறிப்பிட்டுயிருந்தார். இது பற்றி சினிமா ரசிகர்கள் சித்தார்த் யாரை குறிப்பிட்டார் என வலைத்தளங்களில் விவாதம் செய்து வந்தனர்

இந்த நிலையில் இன்று சித்தார்த் நடிக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் அந்த சர்ச்சையான டுவிட் குறித்து சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அதுபற்றி கூறுகையில் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு டுவிட் செய்யவில்லை. எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் நினைத்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.