Home Tamil Cinema News ஜில் ஜங் ஜக் ஒரு காமெடி படமென சித்தார்த் பேச்சு

ஜில் ஜங் ஜக் ஒரு காமெடி படமென சித்தார்த் பேச்சு

139

siddharth-jil-jung-juk-trailer

நடிகர் சித்தார்த் தனது ஏடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘ஜில் ஜங் ஜக்’. இந்தப் படம் பற்றி நிருபர்களிடம் சித்தார்த் பேட்டியளித்தார். அதில், தீரஜ் வைத்தி இயக்கிய பைலட் என்ற குறும்படம்தான் ஜில் ஜங் ஜக் ஆகி இருக்கிறது. குறும்படத்தில் பணியாற்றிய அனைவரையும் இதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறேன். நாஞ்சில் சிவாஜி, ஜம்புலிங்கம், ஜாக்குவார் ஜகன் என்ற மூன்று கேரக்டர்களின் பெயர் சுருக்கமே ‘ஜில் ஜங் ஜக்’.

இதன் தலைப்பு தமிழில் இல்லாததால் வரிவிலக்கு கிடைக்காது என்கிறார்கள். நான் அதற்கு விண்ணப்பிக்கனும் இல்லை. சாதராண மூன்று கேரக்டர்கள், ஒரு அசாதரண வேலையை செய்கிறார்கள். அது என்ன என்பதை காமெடியாக சொல்கிறோம். படத்தில் எந்த மெசேஜும் இல்லை. இரண்டு மணி நேர சிரிப்புக்கு உத்தரவாதம் தரமுடியும்.

படத்தின் கதைக்கு ஹீரோயின் தேவைப்படவில்லை. ஹீரோயின் இல்லாத குறையை போக்க சில விஷயங்களை வைத்திருக்கிறோம். தமிழ் சினிமாவின் இது முக்கியமான படமாக இருக்கும். இவ்வாறு சித்தார்த் கூறினார்.

இந்தப்படத்தை தீரஜ் வைத்தி இயக்கி உள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு. விஷால் சந்திரசேகர் இசை. அவினாஷ் ரகுதேவன், சனந்த், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here