Home Tamil Cinema News இராணுவம் சார்ந்த படத்திற்கு இசையமைக்கும் சித்தார்த் விபின்

இராணுவம் சார்ந்த படத்திற்கு இசையமைக்கும் சித்தார்த் விபின்

91

Siddharth-Vipin

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் தற்போது மோகன்லால் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மேஜர் ரவி இயக்கும் மலையாள படத்தில் மோகன் லால் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த குருஷேத்ரா என்ற மலையாள படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் மீண்டும் இப்படத்தில் மோகன்லால், மேஜர் ரவியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

இந்தப் படம் 1971-ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த போரின் பின்னணியை வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் மோகன்லால் ராணுவ மேஜராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்திய – பாகிஸ்தான் எல்லை பிரதேசங்களில் நடக்கவிருக்கிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நான் பேய் பேசுகிறேன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இவருடைய இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.